வெடிக்க தொடங்கியது மெக்சிகோவின் அடையாளமான போபோ எரிமலை…!! (வீடியோ)

மெக்ஸிகோவில் உள்ள எல் போபோ எரிமலை சாம்பலையும், புகையையும் அதிக அளவில் வெளியேற்றி வருவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மெக்ஸிகோவின் அடையாளமாகக் கருதப்படும் இந்த எரிமலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெடிப்பு ஏற்பட்ட நிலையில் சுமார் ஆயிரத்து 968 அடி உயரத்திற்கு சாம்பலையும், புகையையும் எல் போபோ எரிமலை வெளியேற்றி வருகிறது.

இதனைத் தொடர்ந்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மெக்ஸிகோவின் பேரிடர் தடுப்புக்கான தேசிய மக்கள் மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த எரிமலை 36 முறைக்கும் அதிகமாக சாம்பல் மற்றும் புகையை வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே