சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா பொதுமுடக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டின் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு நடத்தப்படாமல் இருந்த தோவுகள் ஜூலை மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
பின்னர் கல்வியாளர்கள் பரிந்துரைக்கு ஏற்ப தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாணவர்களுக்கு முந்தைய பருவத் தேர்வுகள், மாணவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் வெளியிட்டுள்ளார்.
மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.