கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்காக தொலைக்காட்சி மூலம் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த மாதம் 24ஆம் தேதி நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி சமூக விலகல் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பதால், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.
ஊரடங்கு வரும் 14ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இரண்டு முறை மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.