மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை

மராட்டியத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பலம் எந்தக் கட்சிக்கும் இல்லாததால் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார்.

105 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெற்று உள்ள பாஜக மராட்டியத்தில் ஆட்சியமைக்க முன்வரவில்லை.

இந்நிலையில் எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாமல், கூட்டணியும் உறுதியாகாமல் இருப்பதால் மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்ப நிலை நீடித்து வருகிறது.

யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து காங்கிரஸ் உயர்நிலைக் கூட்டம் மீண்டும் கூட உள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராத நிலையில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பரிந்துரைத்ததாக தகவல் வெளியான நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் இன்று பிரேசில் செல்ல உள்ள நிலையில் அவசர அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிர நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே