வெயில் கால உணவுப் பட்டியலில் வெள்ளரிக்காய், தயிர் கட்டாயம் இடம் பெறும். ஆனால் அதை பலரும் தனித்தனியாக சாப்பிட்டிருக்கலாம் அல்லது ரைத்தா செய்து சாப்பிட்டிருக்கலாம்.
ஆனால் அவற்றை ஒன்றாக அரைத்து லஸ்ஸி செய்து சாப்பிட்டால் அந்த சுவை எப்படி இருக்கும் தெரியுமா..டிரை பண்ணி பாருங்க.. ரெசிபி கீழே…
தேவையான பொருட்கள் :
வெள்ளரிக்காய் – 1 கப்
கருவேப்பிலை – 2 கொத்து
புதினா – சிறிதளவு
தயிர் – 1 கப்
சீரகப் பொடி – 1/4 tsp
உப்பு – 1/4 tsp
செய்முறை :
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். பின் மிக்ஸி ஜாரில் ஒவ்வொன்றாக சேர்த்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
பின் வடிகட்டியில் ஊற்றி நன்கு வடித்துவிட்டு குடியுங்கள். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்துக்கொள்ளலாம்.
அவ்வளவுதான் வெள்ளரிக்காய் லஸ்ஸி தயார்.