RECENT : கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே  கடும் போட்டி நிலவியது.

இறுதி முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கோத்தபய அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

இதற்கிடையே தான் வெற்றிபெற்றதாக கோத்தபய ராஜபக்ச சில மணி நேரங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதனால், அவரது கட்சியினர் கொண்டாடத்தில் ஈடுபட்டனர். எனினும், இறுதி முடிவுகள் மாலை அறிவிக்கப்படும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

இந்த நிலையில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு மேம்பட இணைந்து செயல்படுவோம். அதிபர் தேர்தலை வெற்றிகரமாக நடத்திய வாக்காளர்களுக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே