தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்..!!

7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்படும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று அரசமைப்பு சாசன திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது மத்திய அரசு.

தேவேந்திர குலத்தான், கடையன், குடும்பன், பள்ளன், காலாடி, பன்னாடி, வாதிரியான் ஆகிய பிரிவுகளை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்த சட்டத்திருத்த மசோதா அடுத்தகட்ட அமர்வில் விவாதத்திற்கு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

மேலும் அரசமைப்பு சாசன சட்டத்தில் செய்யப்படும் திருத்தம் தமிழகத்திற்கே பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ளனர். 

விரைவில் இந்த சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாம் என்று கூறப்படுகிறது.

அப்படி வந்தால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே