தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மார்ச் மாதம் முடிந்த பிறகு வருகின்ற 14-ஆம் தேதி சட்டசபை மீண்டும் நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டசபை கூட்டம் 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், சட்டசபை கூட்டம் நடைபெறும் 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில், முதல்வர், துணை முதல்வர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். 

முதல் நாள் கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிகளின் மறைவு குறித்த இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே