டாஸ்மார்க்கில் கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண்மை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும், கடைகள் முன்பு மதுபானங்களின் விலைபட்டியல் வைக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கைகளில் ஏற்கனவே டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனைகே கடைகளுக்கு மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையிடும் படி சம்பந்தபட்ட டாஸ்மார்க் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளின் முன்பு விலைபட்டியலை வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து தலைமை அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மதுபான சில்லறை விற்பனை கடைகளில் வாடிக்கையாளர்கள் பெற்று செல்லும் மது வகைகளுக்கான பற்றுச்சீட்டு ரசீது வாடிக்கையாளர்களுக்கு பில் புத்தகம் கண்டிப்பாக வழங்கப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே அனைத்து மாவட்ட மேலாளர்களும் தத்தம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபான சில்லறை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் களின் பார்வையில் படும்படி அனைத்து மது வகைகளின் விலைபட்டியலை வைத்திடவும், அவர்கள் வாங்கும் மதுவிற்கான உரிய பற்றுசீட்டு ரசீது வழங்கிடவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் அவை கடைபிடிக்கப்படுகின்றதா என மாவட்ட மேலாளர் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவும், தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ள்ளது.
மேலும் அனைத்து கடைப்பணியாளர்களுக்கும் இது குறித்து சுற்றறிக்கை அனுப்பி அதற்கான அத்தாச்சியினை பெற்று வைத்து கொள்ளுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மற்றொரு சுற்றறிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக மத்ஹஉவர்பாணி செய்யக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சுற்றைக்கையில் சென்னை உயர் நீதிமன்ற கிளையில் குற்றவியை வழக்கு ஒன்றில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை கடைகளிலிருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யும் டாஸ்மார்க் மதுபான விற்பனையாளர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
எனவே அனைத்து மாவட்ட மேலாளர்களும், மதுபான சில்லறை விற்பனை கதைகளிலிருந்து மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்தல் கூடாது என்பதை தத்தம் மாவட்ட கடைப்பணியாளர்களின் ஆய்வு கோட்டம் நடத்தி, இதுகுறித்து விளக்கமாக தெரிவித்து அனைத்து கடைப் பணியாளர்களிடமும் சான்றொப்பம் பெற்றிட வலியுறுத்தப்பட்டுள்ளது.