பத்திரிகையாளர் வரதராஜன் மீது தொற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் கரோனா சிகிச்சைக்கு படுக்கைத் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அது குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருந்தே இல்லாத நிலையில் 56% பேரை குணப்படுத்தியுள்ளோம்.

சென்னையில் 84% தெருக்களில் கொரோனா தாக்கம் இல்லை. சென்னையில் உள்ள 6,000 தெருக்களில் 16% மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 11,000 ஊழியர்கள் மூலம் நோய் கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதித்த உறவினருக்கு மருத்துவமனையில் இடமில்லை என்று கூறிய ஊடகவியலாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

முன்னதாக , கொரோனா வராது என நினைத்து யாரும் வெளியே சுற்றாதீர்கள் என்று தூர்தர்ஷன் முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கண்ணீர் உடன் வீடியோ பதிவிட்டிருந்தார்.

சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கை இல்லை. மேலும் நோயாளியை அழைத்து வரவேண்டாமென மருத்துவர்கள் கூறுகின்றனர் என அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க முடியும்.

நேரடியாக அவர் மருத்துவமனைக்கு வரத் தயாரா? தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளன.

பேரிடர் காலத்தில் செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவலைப் பரப்பியுள்ளார்.

தவறான தகவலைப் பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றச்சாட்டுகள் சொல்லும் முன் சிந்தியுங்கள்.

வரதராஜன் சொன்னக் குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மையில்லை. எந்த செயலாளரை அவர் தொடர்பு கொண்டார் என்பதை விளக்க வேண்டும்.

எந்த மருத்துவவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்ற தெளிவுபடுத்த வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக பேரிடர் காலத்தில் தவறான தகவலைப் பரப்பியதாக, பெருந்தொற்றுநோய் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே