குளறுபடி நடந்த வாக்குச் சாவடிகளுக்கு நாளை மறுவாக்குப்பதிவு

முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த இடங்களில் சிலவற்றில் மறுவாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

வாக்குப் பெட்டிக்கு தீ வைப்பு மற்றும் வாக்குச் சீட்டில் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தமிழகத்தில் சில இடங்களில் நாளை மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி

  • திருவள்ளூர் கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • தூத்துக்குடியில் நெடுங்குளம் ஊராட்சியின் 1-வது வார்டில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
  • நாகை சீர்காழி அருகே கூழையூர் கிராமத்தில் இருபதாவது வார்டு உறுப்பினர் பதவிக்குக்கும்,
  • புதுக்கோட்டையில் விராலிமலை பதினைந்தாவது வார்டுக்கு உட்பட்ட 13 வாக்குச்சாவடிகளுக்கும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.
  • தஞ்சையில் செம்மங்குடி ஊராட்சியில் 8 மற்றும் 9 வது வார்டுகளிலும்,
  • மதுரையில் கொட்டாம்பட்டி ஊராட்சியில் சென்னகரம்பட்டி கிராமம் எட்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
  • கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை ஒன்றியம் 21ஆம் வார்டில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே