பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது,

“சட்டப்பேரவைத் தேர்தல்: கீழ்வேளூர் தொகுதி – பாமக புதிய வேட்பாளர் வடிவேல் இராவணன்.

தமிழ்நாட்டில் வரும் 06.04.2021 அன்று நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், நாகப்பட்டினம் மாவட்டம் 164. கீழ்வேளூர் (தனி) தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு.வேத.முகுந்தன் அவர்கள் மாற்றப்படுகிறார்.

அவருக்குப் பதிலாக கட்சியின் பொதுச் செயலாளர் திரு.வடிவேல் இராவணன் பா.ம.க. வேட்பாளராக போட்டியிடுவார் என்பதை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே