ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதி கொள்கை ஆய்வு கூட்ட முடிவில் வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ 5.40 விழுக்காடாக உள்ள நிலையில் அது 5.15 விழுக்காடு குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நான்கு நிதிக்கொள்கை கூட்டங்களிலும் மொத்தம் 1.15 விழுக்காடு கடன் வட்டி குறைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.9 விழுக்காடாக இருக்கும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 6.1 விழுக்காடாக குறைத்து ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில் தொடர்ந்து கடன் வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்து வருகிறது.

ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால், வீடு வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது.

பத்து மாதங்களில் மொத்தமாக 1.35 விழுக்காடு வட்டி குறைக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தி வருகிறது.

கடன் வட்டி குறைக்கப்பட்டால் தொழில் துறை கட்டுமான துறைகள் வளர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு உயரும் என்று மத்திய அரசு கருதுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே