விற்பனை இயந்திர மாற்றம் காரணமாக ரேஷன் பொருட்கள் வாங்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் விற்பனை இயந்திர மாற்றம் காரணமாக செப். 25, செப். 26 க்கு பதில், செப்.28, செப்.29 இல் ரேஷன் பொருட்களைப் பெறலாம்.
பணியாளர்கள் செப்.23 அன்று விற்பனைக்குப் பின் இயந்திரத்தை உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
செப்.25, செப்.26 இல் பொறியாளர்கள் புதிய விற்பனை இயந்திரத்தில் பதிவுகளை மேற்கொண்டு மண்டல வாரியாக வழங்குவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது.
அதேபோல் தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் சேவையை ,முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் அடிப்படையில் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.