எதிர்ப்புகளுக்கு மத்தியில் எம்.பி.யாக பதவியேற்ற ரஞ்சன் கோகாய்..!

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் நீதிபதி ரஞ்சன் கோகோய்.

ராமஜென்ம பூமி, ரஃபேல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் மத்திய அரசுக்கு சாதகமாக நடந்துகொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

இந்த நிலையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக ரஞ்சன் கோகோய் நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார்.

இது எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ரஞ்சன் கோகோயை விமர்சித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்த நிலையில் ரஞ்சன் கோகோய் இன்று மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

அவர் பதவி ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அவர் பதவி ஏற்கும் நேரத்தில் வெளிநடப்பு செய்தன.

நியமன உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய்க்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுங்கட்சி எம்.பி-க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே