கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு – யுஜிசி அறிவிப்பு

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது.

அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது.

இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 169ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரில் 8ம் வகுப்பு வரை எவ்வித தேர்வும் எழுதப்படாமல், அனைவரும் அடுத்த வகுப்புக்கு செல்லும் வகையில் ‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கோரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைக்க யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மாணிய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, திட்டமிட்ட செமஸ்டர் தேர்வுகளையும், விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மார்ச் 31-க்கு பிறகு ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே