தர்பார் படப்பிடிப்பை புறக்கணித்த நயன்தாரா

சம்பள பாக்கி காரணமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பை நடிகை நயன்தாரா புறக்கணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாராவுக்கு சம்பள பாக்கி இருந்ததால், கடைசி நாள் படப்பிடிப்பை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

தயாரிப்பு தரப்பிலிருந்து முழு சம்பளம் வழங்கவில்லை என்றால் அதற்குத்தான் பொறுப்பேற்பதாக இயக்குனர் முருகதாஸ் வாக்குறுதி அளித்த பின்னர், அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே