காத்திருப்பு பட்டியலில் இருந்த இராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றம்

இராமநாதபுரம் கள்ளர் தெருவை சேர்ந்த அருண் என்ற இளைஞரும் அவருடைய நண்பர் யோகஸ்வரனும் சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும்போது அங்கே பைக்கில் வந்தவர்கள் நண்பர்கள் இருவரையும் வெட்டி சாய்த்தனர்.

இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யோகேஸ்வரன் மருவத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கொலைக்கு முன்விரோதமே காரணம் என காவல்துறையினர் கூறிய நிலையில் மத பிரச்னையே காரணம் என பாஜகவினர் குற்றஞ்சாட்டிவந்தனர்.

இந்த பிரச்னையின் எதிரொலியாக ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். 

புதிய எஸ்.பியாக சென்னை பூக்கடை துணை ஆணையர் கார்த்திக் ராமநாதபுரம் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் காத்திருப்பு பட்டியலில் இருந்த முன்னாள் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கும் பிரிவு எஸ்.பியாக வருண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், நிர்வாக காரணங்களால் தான் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்றும் பாஜகவின் அழுத்தம் காரணமாக காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும் விளக்கமளித்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே