திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்ட படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல்

திமுக தலைவர் முக ஸ்டாலின் சைக்கிள் பயிற்சி மேற்கொள்ளும் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிங்க் நிற டி சர்ட்டில், ஸ்போர்ட்ஸ் சைக்கிளுடன் அவர் கொடுத்து இருக்கும் போஸ் தற்போது பகிரப்பட்டு வருகிறது.

பொதுவாக திமுக தலைவர் ஜிம், நடைபயிற்சி என்று எப்போதும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்பவர். இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.

இத்துடன், தேர்தல் நேரங்களில் இவர் நடைபயிற்சி சென்றே மக்களை சந்திப்பதும் வழக்கம்.

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நடைபயிற்சி மேற்கொண்டு மக்களை சந்தித்தவர்.

2015ம் ஆண்டு தொடங்கிய நமக்கு நாமே சுற்றுப்பயணத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நேரில் சென்று மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார். 

ஆனால், சென்னை நகரங்களில் பொதுவாக இவர் நடைபயிற்சி மேற்கொள்வது இல்லை. சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவதும் இல்லை.

வீட்டிலேயே ஜிம் பயிற்சியில் ஈடுபட கூடாரம் அமைத்து இருக்கிறார். இதற்காக இவர் வேறு எங்கும் செல்வதில்லை. ஆனால், தற்போது ஒரு பாலத்தின் மீது நின்று கொண்டு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இதில் ஸ்போர்ட்ஸ் சைக்கிள் ஒன்றை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார். பிங்க் நிற டி சர்ட் அணிந்து இருக்கிறார். தலையில் ஹெல்மெட்டும், கையுறையும் அணிந்து இருக்கிறார்.

அந்தப் புகைப்படத்தில் சைக்கிளின் விலை ரூ. 1,74,490.00 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு விலை அதிகமான சைக்கிளை ஸ்டாலின் ஊக்குவிக்கிறாரா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

தற்போது கொரோனா முடக்கம் காரணமாக கட்சி கூட்டங்களை காணொளி மூலம்தான் நடத்தி வருகிறார்.

அப்படி இருக்கும்போது அவர் வெளியே சென்று இதுபோன்று விளம்பரப்படுத்தி இருக்க மாட்டார் என்று ஒரு சாரர் கூறுகின்றனர்.

இல்லை இது விளம்பர யுக்தியாகவும் இருக்கலாம் அல்லது தேர்தலுக்கு என்று அமர்த்தப்பட்டு இருக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐடியாவாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே