இராமநாதபுரத்தில் மர்ம நபர்கள் கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இராமநாதபுரம் வசந்த நகர் விலக்கு கள்ளர் தெருவைச் சேர்ந்தவர் அருண் பிரகாஷ். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் யோகேஸ்வரன் (20) என்பவரும் சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஐந்து இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி, வாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவர்களை கத்தியால் சரமாரியாக வெட்டியது.

இதில் அருண் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் அவருடன் இருந்த யோகேஸ்வரன் உடலில் பலத்த காயமடைந்த நிலையில், இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கேனிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக முகமது ரியாஸ், காமாட்சி, சுரேஷ் மற்றும் சாகுல் ஹமீது ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான லெஃப்ட் சேக் (எ) சேக் அப்துல் ரகுமான் மற்றும் சரவணன் ஆகியோரை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் நேரடி மேற்பார்வையில், மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே