கர்நாடகா பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கர்நாடகா பா.ஜ. முதல்வர் எடியூரப்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்று இருந்தது. சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்நிலையில் இவரது அமைச்சரவையில் பஞ்சாய்த்து ராஜ் அமைச்சராக இருப்பவர் ஈஸ்வரப்பா, நேற்று இவருக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருந்துள்ளது.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈஸ்வரப்பா பூரண குணமடைய முதல்வர் எடியூரப்பா பிரார்த்திப்பாக தெரிவித்துள்ளார்.