ராமர் என்றால் அன்பு, நீதி : ராகுல் காந்தி ட்விட்

ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக வரலாற்று சிறப்பு மிக்க பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

இந்த சூழ்நிலையில் பகவான் ராமர் பற்றியும் அவரது குண நலன்களை குறிப்பிட்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்ற பிரதமர் மோடி முதல் செங்கல் எடுத்து கொடுத்து விழாவை தொடங்கி வைத்தார்.

ராமர் கோவில் பூமி பூஜை விழா பற்றி அரசியல் தலைவர்கள் பலரும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமர் என்பவர் எப்படிப்பட்டவர் என்று கூறி பதிவிட்டுள்ளார்.

சிறப்பான மனித குணங்களைக் கொண்டவர் ராமர் அவரது குண நலன்களை நாம் ஆழமாக நமது மனதில் பொருத்தி பார்க்க வேண்டும்.

ராமர் என்றால் அன்பு அவர் ஒரு போதும் வெறுப்பில் தோன்ற முடியாது. ராமர் என்றால் கருணை அது ஒருபோதும் கொடூரமாக தோன்ற முடியாது.

ராமர் என்றால் நீதி அவர் ஒரு போதும் அநீதியில் தோன்ற முடியாது என்று ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே