முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி வருகை

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திருச்சி செல்கிறார்.

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை ஆய்வு செய்கிறார். இந்த 3 மாவட்டங்களிலும் நடைபெற்று வரும் சுமார் 312 குடிமராமத்து பணிகளில் 90 சதவீத தூர் வாரும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில் இது குறித்த ஆய்வுக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் திருச்சி ஆட்சியர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் திருச்சி, தஞ்சை ,திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்ட ஆட்சியர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

இந்த ஆய்வுகூட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள் குறித்து கேட்டறியும் முதலமைச்சர், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகளை வழங்குகிறார். முக்கொம்பு கதவணை கட்டுமானப் பணிகளையும் முதலமைச்சர் பார்வையிடுகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 394 posts and counting. See all posts by Jiiva

Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே