அதிகபட்ச பாதிப்பு !! தமிழகத்தில் நேற்று மட்டும் 2,710 பேருக்கு கொரோனா .

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.25 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் மகாராஷ்டிரா மாநிலம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவை அடுத்து தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மத்திய அரசு அறிவுரை பரிசோதனைகளை அதிகப்படுத்தினால் பாதிப்புகள் அதிகமாக வெளிவருகிறது என தமிழக சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளார்கள். மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தலைநகரான சென்னையில் 1,487 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளளது. சென்னையில் மொத்த எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்த பாதிப்பு எண்ணிக்கையை கட்டுப்படுத்த சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மே 19 ஆம் தேதியிலிருந்து 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இந்த நேரத்தில் கொரோனா அதிகம் பாதித்த இடங்களில் முகாம் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே