கேளம்பாக்கம் செல்ல இன்று இ-பாஸ் எடுத்தார் ரஜினிகாந்த்..!

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் முகக்கவசம் அணிந்த நிலையில் கார் ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படமும் , கேளம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனது மகள் , மருமகன் மற்றும் பேரனுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது.

இதையடுத்து, ரஜினிகாந்த் இ- பாஸ் பெற்று தான் கேளம்பாக்கம் வீட்டுக்குச் சென்றாரா ? என்று கேள்வி எழுந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , கேளம்பாக்கம் செல்ல ரஜினி இ -பாஸ் பெற்றாரா என பின்னர் ஆய்வு செய்து தெரிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் , சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு இன்று செல்வதற்கு இ -பாஸ் எடுத்துள்ளார். 

மருத்துவக் காரணங்களுக்காக செல்வதாகவும் , கார் ஓட்டுநருடன் செல்வதாகவும் அந்த இ- பாஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கு இ- பாஸ் வழங்கப்பட்ட தேதியாக நேற்றைய தேதியும் (22) பயண தேதியாக இன்றைய தேதியும் (23) அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே