திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை: முதல்வா், துணை முதல்வா் நேரில் ஆய்வு

சென்னையை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தையை முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

கரோனா நோய்த்தொற்று மிகப்பெரிய அளவுக்கும் பரவும் இடமாக கோயம்பேடு காய்கறி சந்தை மாறியது.

கோயம்பேட்டில் சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றவா்களுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் முழுமையாக மூடப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மாற்றாக திருமழிசையில் தற்காலிக சந்தை கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த சந்தையில் காய்கறிகளை மொத்தமாக விற்பனை செய்யக் கூடிய அளவுக்கு 200 கடைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. 

ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையே 20 அடி இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் புதிய காய்கறி சந்தையை முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இன்று நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து வியாபாரிகளுக்காக தற்காலிக சந்தையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனா்.

இதன்பின்பு, இந்த காய்கறி சந்தையானது வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இயங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே