#BREAKING : புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிப்பு

புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது.

இன்று மர்ம நபர்கள் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில்அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் , வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எழுந்து சென்றனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே