கஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களில் 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன.
நாகை மாவட்டம் கோடியக்கரை தலைஞாயிறு கிராமத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகளில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஈடுபட்டனர்.
அப்போது வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு கட்டி தர உறுதி தரப்பட்டது.
அதன்படி 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை நாகை மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் செயலாளர் இராஜேஸ்வரன் இடம் ரஜினிகாந்த் வழங்கினார்.