ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விடுத்த மனநலம் பாதித்த மாணவன் வீட்டிற்கு நிவாரண உதவி வழங்கிய ரஜினி மக்கள் மன்றம்…!!!

ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த மாணவன் குடும்பத்திற்கு நேரில் சென்று நிவாரண உதவி வழங்கியுள்ளனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் வெடிக்குண்டு இருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு மோப்ப நாய்களுடன் சென்ற வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் முடிவில் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு ஏதுமில்லை என்பது உறுதியானது. வெடிக்குண்டு இருப்பதாக தகவல் கொடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் கடலூரை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 15 வயது சிறுவன்தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தனது அப்பா செல்போன் மூலம், நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.

தனிப்படை போலிசார் பிடித்து அந்த சிறுவனை நெல்லிக்குப்பம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்தது. அதை தொடர்ந்து அந்த சிறுவனை எச்சரித்த போலீசார் அவரது பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டு சிறுவனை விடுவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே