ரிஷி கபூர் மறைவிற்கு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் இரங்கல்..!

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிஷிகபூர் மறைவிற்கு ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் புகழ்பெற்ற நடிகர் நடிகர் ரிஷிகபூர். 1970 மற்றும் 80-களில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். 

ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல் உள்ளிட்ட பல படங்கள் மாபெரும் வெற்றியடைந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

ரிஷி கபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒரு வருடமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின் கடந்த செப்டம்பரில் இந்தியா திரும்பினார்.

இந்நிலையில் மோசமான உடல்நிலை காரணமாக மும்பையில் இருக்கும் எச்.என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ரிஷிகபூர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

ரிஷிகபூர் மகன் ரன்பீர் கபூர் தற்போது இந்தியில் முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

ரிஷிகபூரின் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில், “இதயம் நொறுங்கியது. என் ஆருயிர் நண்பர், ஆன்மா சாந்தியடையட்டும்“ என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ரிஷிகபூர் உயிரிழப்பு என்னை சிதைத்துவிட்டது“ என்றுள்ளார்.

அக்ஷய் குமார் தனது ட்விட்டரில், “ ரிஷிகபூர் காலமானார் என்ற செய்தியை அறிந்து  மனச்சேர்வு அடைந்தேன். அவர் காலத்தை வென்ற கலைஞர். ஒரு சிறந்த இணை நடிகர் மற்றும் குடும்பத்தின் நல்ல நண்பர். அவரது குடும்பத்தினருடன் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்“ என்றுள்ளார்.

நடிகர் ரிஷி கபூரின் மறைவிற்கு மேலும் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே