அமைதியை நிலைநாட்ட தயார் – உலமா சபை நிர்வாகிகள் சந்திப்புக்குப் பின் ரஜினி ட்வீட்

CAA, NPR குறித்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கி அமைதி ஏற்படுத்த தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என, நடிகர் ரஜினி கூறியதாக அவரை சந்தித்த தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ரஜினியின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகிகள், குடியுரிமை சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ரஜினியிடம் எடுத்து கூறியதாக தெரிவித்தனர்.

Rajini Tweet

இந்த சந்திப்பு தொடர்பாக ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைந்ததாகவும்;

எப்போதும் அன்பும், ஒற்றுமையும், அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்காமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை ஆமோதிப்பதாகவும் தெரிவித்திருந்தார். 

மேலும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தமது தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே