சென்னை வந்தார் தோனி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையை தொடர்ந்து 8 மாத இடைவெளிக்கு பிறகு, கிரிக்கெட் பயிற்சியை தொடங்குவதற்காக தோனி சென்னை வந்தடைந்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தோனியை களத்தில் காண இருப்பது, அவரது ரசிகர்களிடையே பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இன்று முதல் சக வீரர்களுடன் பயிற்சியை தொடங்கும் தோனி, மார்ச் 19-ம் தேதி வரை தொடர் பயிற்சியில் ஈடுபடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே