ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் 168-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் அடுத்ததாக சிறுத்தை, வீரம், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார்.

ரஜினியின் 168-வது படமாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளனர்.

இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

எந்திரன், பேட்ட ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே