ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி!

சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்தின் வீடு வரை அவர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற இளைஞரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இமயமலை சென்ற ரஜனி நேற்று சென்னை திருப்பினார்.

விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டிற்கு ரஜினி புறப்பட்டதை அடுத்து அவரது காரை வீடு வரை பைக்கில் ஒரு இளைஞர் பின்தொடர்ந்து சென்று உள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்றதும், தனது வீட்டில் பணியாற்றுபவர்களிடம் கூறி தனது காரை பின்தொடர்ந்து வந்த இளைஞரை ரஜினிகாந்த் வீட்டிற்கு அழைத்துள்ளார்.

அந்த இளைஞரிடம் இவ்வாறு ஆபத்தான முறையில் பைக்கை ஓட்டாதீர்கள் என்று அறிவுரை கூறிய ரஜினி, அவரோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே