சமூக அக்கறையுடன் “பிக்பாஸ் 4” நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்ட கமல்ஹாசன்

உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் முதல் மூன்று சீசன்களை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில் ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் திரைத்துறையைச் சார்ந்த பிரபலங்களே அதிகம் பங்கேற்று வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மேலும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று செய்திகள் கசிந்துள்ளன.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சற்று முன்னர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பிக்பாஸ் 4’ நிகழ்ச்சி குறித்த ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே