என்னதான் இருந்தாலும் பழசை மறக்க முடியுமா?? குக்கருடன் சென்று இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட ராஜவர்மன்..!!

சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அ.ம.மு க கட்சியில் சேர்ந்த ராஜவர்மன், குக்கருடன் சென்று இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு சிரிப்பை ஏற்படுத்தினார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வாக இருப்பவர் ராஜவர்மன். இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட அ.தி.மு.கவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால், ஒரே இரவில் கட்சி மாறிய அவருக்கு அ.ம. மு.க வில் அதே தொகுதியில் சீட் வழங்கப்பட்டது.

அ.தி.மு.கவில் தனக்கு சீட் கிடைக்காதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் காரணமென்று கருதி அவரை கடுமையாக சாடி வருகிறார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் தற்போது, பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் ராஜவர்மன், 2021 ல் முதல்வர் எடப்பாடியை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றுவார்கள் என்று கடுமையாக சாடினார்.

அமமுக குக்கர் சின்னத்தில் தான் போட்டியிட வாய்ப்பு வழங்கிய முதல்வர் மற்றும் துரோகி துணை முதல்வருக்கு நன்றி. நான் என்ன தவறு செய்தேன் என்று யாராவது சொல்ல முடியுமா? மக்களான உங்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும்தான் அதிமுக கட்சியா என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார். மேலும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.ம.மு. க வெற்றி பெறும்.அமைச்சர் ராஜேந்தி பாலாஜியின் ஒரு தனி நபருக்காக முதல்வரும் , துணை முதல்வரும் தன்னை ஒதுக்கி தள்ளியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ராஜவர்மன் பேச்சு கடைசி வரை நன்றாகவே இருந்தது.

ஆனால், தன் பேச்சை முடிக்கும் நேரத்தில்தான் ராஜவர்மன் டங்க் ஸ்லிப்பாகி பழக்க தோசத்தில் தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு விட சுற்றியிருந்த தொண்டர்கள் திகைத்து போனார்கள்.

பின்னர், சுதாரித்துக் கொண்ட ராஜவர்மன், பேச்சை மாற்றி குக்கருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

‘ஃபினிஷிங் சரியில்லேயே ‘ என்று அ.ம.மு. க தொண்டர்கள் கமெண்ட் அடித்து கலைந்து சென்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே