தமிழக மக்களுக்கு வணக்கம், ஜல்லிக்கட்டில் பங்கேற்றது மகிழச்சியளிக்கிறது என மதுரை அவனியாபுரத்தில் ராகுல்காந்தி எம்.பி பேசினார்.

தமிழ் கலாசாரம், பாரம்பரியம் இந்தியாவிற்கு இன்றியமையாதது எனவும், அது மதிக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த ராகுல் காந்தி மேடையில் பேசினார்.

தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது என கடமை என கூறினார்.

உங்களது உணர்ச்சிகளையும், கலாசாரத்தையும் ரசித்து பாராட்டவே வந்துள்ளேன் என தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த ராகுல் காந்தி சுமார் 30 நிமிடங்களுக்கு பிறகு புறப்பட்டுச் சென்றார்.

ஜல்லிக்கட்டை ஆர்வமுடன் கண்டு ரசித்த ராகுல்காந்தி… மெய்க்காப்பாளரை தள்ளி நிற்குமாறு அறிவுறுத்தினார்.

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மிகவும் ஆர்வமுடன் கண்டு ரசித்தார்.

வாடிவாசலில் காளைகள் சீறி வருவதை கண்ட அவர் ஜல்லிக்கட்டு குறித்த மேலும் சில விவரங்களை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டு அறிந்துகொண்டார்.

ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக மட்டும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அவர் மதுரை வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ராகுல்காந்தி அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ராகுலின் கார் நேராக மேடையின் பின்புறம் சென்றதை அடுத்து அந்த மேடையில், ராகுலுடன் கே.எஸ்.அழகிரி, கே.சி.வேனுகோபால், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மாணிக்கம் தாகூர் எம்.பி.க்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே