அதிக கடன் பாக்கி வைத்துள்ள 50 பேர் பட்டியலை வெளியிடுக : ராகுல் காந்தி

வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பெயர் பட்டியலை வெளியிடாமல் அரசு மறைப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ராகுல்காந்தி, வேண்டுமென்ற கடனை திருப்பிச் செலுத்தாத 50 நபர்களின் பெயரை வெளியிடும்படி வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த இணையமைச்சர் அனுராக் தாக்கூர், ”யெஸ் வங்கியில் டெபாசிட் செய்துள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரின் டெபாசிட் தொகையும் பாதுகாப்பாக இருக்கும். கடன் மீட்புப் பணியில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்று பதிலளித்தார்.

மேலும் கடனை திருப்பிச் செலுத்தாதவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல் ஓடிவிட்டதாகவும் விமர்சித்தார்.

அப்போது, ராகுல்காந்தி மீண்டும் கேள்வியெழுப்ப முயன்றதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே