ராகவேந்திரா திருமண மண்டப சொத்து வரி விவகாரம்..; வழக்கை திரும்பப் பெற ரஜினிகாந்த் முடிவு..!!

ராகவேந்திரா மண்டபத்தின் சொத்து வரி வழக்கை வாபஸ் பெற ரஜினிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி ரூ.6 லட்சம் செலுத்துமாறு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆனால் பொதுமுடக்க நாட்களில் மண்டபம் வாடகைக்கு விடப்படவில்லை என்பதால் சொத்து வரியை ரத்து செய்யக்கோரி ரஜினி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

கடந்த 23ம் தேதி சொத்துவரி குறித்து சென்னை மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும் அதற்கு எந்த வித பதிலும் வரவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி மனுதாக்கல் செய்ய ரஜினி தரப்பில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களில் வழுக்கு தொடர்ந்து நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாக ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், வழக்கை திரும்பப்பெற ரஜினிக்கு அனுமதி வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே