புழல் ஏரி பிற்பகல் 3 மணிக்கு திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

புழல் ஏரி திறக்கப்படவுள்ளதால் கரையோர மக்களுக்கு கலெக்டர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக வருவதால் உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

21 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் தற்போது 19 அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (டிச.,04) மாலை 3 மணிக்கு முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

மேலும் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே புழல் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆனது சுற்றி உள்ள கிராமங்களான நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்ட் லைன், புழல், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம் வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கலெக்டர் பொன்னையா அறிவுறுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே