#BREAKING : தமிழகத்தில் இன்று (மார்ச் 20) 1243 பேருக்கு கொரோனா..; 8 பேர் பலி..!!

தமிழகத்தில் மேலும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை  8,65,693 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,65,693 ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 634 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,45,812 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 08 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,590 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 03; தனியார் மருத்துவமனையில் 05 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 458 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,41,127 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,87,05,851 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 75,165 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 7,291 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,22,902 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 743 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,42,756 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 500 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 35 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 259 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 69; தனியார் மையங்கள் 190.

* வெளிமாநிலங்களில் இருந்து இன்று தமிழகம் வந்த 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* மகாராஷ்டிரா-1.
*ராஜஸ்தான் -1.

* வெளிநாடுகளில் இருந்து இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

* அரபு எமிரேட்ஸ்-1 

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே