முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறும்.

இதில் பங்கேற்க திமுக தலைவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் , அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அத்துடன் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே