மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் 3ஆம் நாளாக கமல்ஹாசன் ஆலோசனை..!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் 3-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டங்களையும், கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கடந்த இரு தினங்களாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நேற்று ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் சட்டசபை தேர்தலுக்கு கழகங்களுடன் கூட்டணி அமைக்காது, மக்களுடன் மட்டுமே கூட்டணி அமைக்கும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று கமல்ஹாசன் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து 3-வது நாளாக ஆலோசனை நடத்தவுள்ளார் .

இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் 3-வது நாளாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டமானது காலையில் புதுச்சேரி சட்டமன்றத் நிர்வாகிகளுடனும், மாலையில் சென்னை மற்றும் புறநகர் சட்டமன்ற நிர்வாகிகளுடனும் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்காக வரும் போது அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பை கொடுக்க காரில் இருந்து நன்றியை கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இறுதி , ஆலோசனை தினமான இன்று கமல்ஹாசன் அவர்கள் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே