புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு – நாராயணசாமி பெயர் இல்லை..!!

புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் 15 தொகுதிகளில் 14 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொகுதி ஒதுக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்ப்பற்ற கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

இந்நிலையில் அங்கு போட்டியிடும் காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 

மேலும், ஊசுடு தொகுதியில் கார்த்திகேயன், இந்திரா நகர் தொகுதியில் கண்ணன், லாஸ்பேட்டை தொகுதியில் வைத்தியநாதன், கதிர்காமம் தொகுதியில் செல்வநாதன், காமராஜ்நகர் தொகுதியில் ஷாஜகான், முத்தியால்பேட்டை தொகுதியில் செந்தில்குமரன், அரியாங்குப்பம் தொகுதியில் ஜெயமூர்த்தி, மணவெளி தொகுதியில் அனந்தராமன், ஏம்பலம் தொகுதியில் கந்தசாமி, நெட்டப்பாக்கம் தொகுதியில் விஜயவேணி, நெடுங்காடு தொகுதியில் மாரிமுத்து, திருநள்ளாறு தொகுதியில் கமலகண்ணன், மாஹி தொகுதியில் ரமேஷ் ப்ரேம்பாத் ஆகிய தொகுதிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

14 பேர்கொண்ட புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பெயர் இடம்பெறவில்லை.

ஏற்கெனவே அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறியதால் அவரது பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

அதேநேரத்தில் இன்னும் ஏனாம் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளது.

இதனால் அத்தொகுதிக்கு நாராயணசாமி பெயர் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே