தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கான இடஒதுக்கீடு விபரத்தை தமிழக அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து, முதற்கட்டமாக 27 மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.
மொத்தமுள்ள 15 மாநகராட்சி மேயர் பதவிகளில், 9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள 6 மேயர் பதவிகளுக்கான இடங்கள் பொது பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் பெண்களுக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.