பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்குக – தமிழக அரசு அரசாணை

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

அதே போல அத்தியாவசிய கடைகள் தவிர, பிற கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பல உணவகங்கள் செயல்பட முடியாத சூழல் நிலவி வருகிறது.

அதே போல வேலைக்கு செல்ல முடியாமல் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மக்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் தலா ரூ.1000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அதன் பின்னர், மீண்டும் மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1000 மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மீனவர்கள், பட்டாசு தொழிலாளர்கள், திருநங்கைகள் பழங்குடியினயினர், கோவில் பூசாரிகள், திருநங்கைகள், உள்ளிட்ட 14 வகையான சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வழங்க ரூ.86 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே