புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளியுங்கள் – ராகுல்காந்தி

இடம்பெயரும் புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிகணக்குகளில் பணம் செலுத்தாமல் கொரோனாவை பரப்புவதாக மத்திய அரசு அவர்கள் மீது பழி சுமத்துகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையில் அவர்களின் வங்கிகணக்குகளில் மத்திய அரசு பணம் செலுத்த வேண்டும். மாறாக, கொரோனாவைப் பரப்புவதாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பழி போடுகிறது.

இனியாவது மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே ராகுல் காந்தி பதிவிட்ட மற்றொரு டீவீட்டில், ‘கொரோனா தடுப்பூசி போடுவதில் நலிந்த பிரிவினருக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச தடுப்பூசி இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா விலைக்கு கட்டுப்பாடு இல்லாமல் தரகர்களை அனுமதித்துவிட்டது. நலிந்த பிரிவினருக்கு தடுப்பூசி கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

மாநில அரசுகளுக்கு தடுப்பூசி விநியோகிப்பதிலும் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது,’ எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே