தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் நிறுவனங்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு..!!

தமிழகத்தில் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுகூறியுள்ள வழிமுறைகளின் படி திரையரங்குகள் 50% ரசிகர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் திரையரங்கில் திரைப்படங்கள் வெளிய வி.பி.எஃப் கட்டணம் அதிகமாக இருப்பதால் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் தலைவர் பாரதிராஜா படங்கள் வெளிவராது என அறிவித்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் டிஜிட்டல் நிறுவனங்களும் இடையே நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், இன்று இதற்காக சுமூகமான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

எனவே வரும் மார்ச் மாதத்திற்குப் பின் எந்தக் கட்டணம் அடிப்படையில் படம் வெளியிடுவது என்பது பற்றி அடுத்தகட்ட பேச்சில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே