டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு ?? துணை முதல்வர் மனிஷ் சிசோடியா விளக்கம்..!!

இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், டெல்லி மற்றும் கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாக டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் இருப்பதால் இங்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைப்பகுதியில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய கட்டுப்பாடுகளின் படி, திருமண நிகழ்ச்சிகளில், 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இதனால் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் பரவத் தொடங்கியது.

ஆனால் இந்த தகவலை முற்றிலும் மறுத்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்தித்திப்பில் கூறுகையில்,

டெல்லியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. சிறந்த மருத்துவமனை மேலாண்மை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளே தீர்வுகளாக இருக்க முடியும்.

அந்த வகையில் டெல்லி அரசு மருத்துவ வசதிகளை சிறப்பாக வழங்கி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே