தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டகலை கல்லூரி நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் தங்கள் கிராமப்புற அனுபவ திட்டத்தின் கீழ் தென்னை டானிக் பற்றிய செயளாக்கத்தை சின்னமனூர் அருகே உள்ள பாளையத்தில் விவசாயிகளுக்கு நடத்தினர்.
தென்னை டானிக் கொடுப்பதற்கான பயன் மற்றும் செயலாக்கம் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தென்னை டானிக் கொடுப்பதன் மூலம் குரும்பை உதிர்வை குறைக்கலாம். தென்னைக்கு தேவையான நுண்ணுட்ட சத்துகளும் கிடைக்கும்.
தென்னை டானிக்கை பயன்படுத்தும் முறை :
- 10 மிலி தென்னை டானிக் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதை 90 மிலி தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.
- ஒரு தென்னை மரத்திற்கு 100 மிலி ஒரு கவரில் எடுத்து தென்னை மரத்தின் கீழ் ஒரு அடி இடைவெளியில் கருஞ்சிவப்பு வேர்களை கீழ் பகுதியில் இருந்து சாய்வாக வெட்ட வேண்டும்.
- பின்னர் கவரின் வாய் பகுதியில் தென்னை வேரோடு சேர்ந்து கட்டிவிட வேண்டும்.
- 2 மணி நேரத்தில் தென்னையின் வேர் டானிக்கை உறிஞ்சி விடும்.
இதேபோல் செயல்படுத்தினால் குரும்பை உதிர்வை தடுக்கலாம் என்று விவசாயிகளுக்கு செயல்முறை மூலம் விளக்குவுறையாற்றினார்கள்.
இம்முகாமில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நமது செய்தியாளர் : C. பரமசிவம்